தவெக மாநாடு: களத்தில் இறங்கிய உளவுத்துறை
தவெக மாநாட்டிற்கு சென்னையில் இருந்து கூட்டத்தை அழைத்துச் சென்றவர்களின் பட்டியலை வார்டு வாரியாக உளவுத்துறை சேகரிக்க தொடங்கியுள்ளது. மாநாட்டில் பங்கேற்றவர்களின் வயது, முகவரி, மற்ற கட்சியின் உறுப்பினர்களா?, சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. முதல்வர், துணை முதல்வர் தொகுதி சென்னையில் இருப்பதால், மாநாட்டிற்கு வந்தவர்கள் ரசிகர்கள் கூட்டமா, வாக்காளர்களா என ஆய்வு செய்யப்படுகிறதாம்.
விஜய்- அண்ணாமலை சந்திப்பு?
அண்ணாமலை, விஜய் சந்தித்ததாக தகவல் பரவி வருகிறது. தவெக மாநாட்டில் பேசிய விஜய், திமுகவை சாடி பேசினார். பாஜகவை முடிந்த வரை விமர்சிப்பதை தவிர்த்தார். இதேபோல், விஜய்யை விமர்சிக்கக் கூடாதென பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் லண்டனில் அண்ணாமலையும், விஜய்யும் நேரில் சந்தித்ததாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை பாஜக, தவெக நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.
3-வது வாரத்தில் லியோ, கோட் படங்களை முந்திய அமரன்
SK நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் பிளாக்பஸ்டர் ஹிட் படமாகியுள்ளது. இதுவரை சுமார் ரூ.280 கோடி வசூலை படம் நெருங்கி விட்டதாக தெரிவிக்கப்படும் சூழலில், தற்போது விஜய் படங்களின் சாதனையை அமரன் முறியடித்துள்ளது. 3-வார வெள்ளிக்கிழமையில் லியோ - 61.4K டிக்கெட்டுகளும், கோட் - 54.95K டிக்கெட்டுகளும் விற்றது. இதனை முறியடித்து அமரனுக்கு 115.05K டிக்கெட்டுகள் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்